பல இலட்சம் இந்தியர்களின் பிரதிபலிப்புதான் எமது தேர்தல் அறிக்கை: ராகுல்
In இந்தியா April 9, 2019 9:50 am GMT 0 Comments 2377 by : Yuganthini

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பல இலட்சம் இந்தியர்களின் பிரதிபலிப்பு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
“குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருப்பவர்களுக்கு வறுமையை ஒழிக்க முடியாது” எனபிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாத்தின்போது மறைமுகமாக காங்கிரஸை குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவேற்றியுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பலமுறை ஆராயப்பட்டு தொடர் விவாதங்களின் பின்னர் உருவாக்கப்பட்டது. மேலும் பல இலட்சம் இந்தியர்களின் பிரதிபலிப்பு ஆகும். நடைமுறையில் சாத்தியப்படுத்தக்கூடிய விடயங்களே கூறப்பட்டுள்ளன.
ஆனால் பா.ஜ.க தேர்தல் அறிக்கை, பூட்டப்பட்ட ஓர் அறையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளதுடன் தனி மனிதரின் குரலாகவும் குறுகிய பார்வை கொண்டதாகவுமே உள்ளது” என ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு வந்த நிலையில் பா.ஜ.க இறுதி தருணத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் அவ்வறிக்கையில் புதிய விடயங்கள் புகுத்தப்படவில்லை எனவும் வினைத்திறனற்றது எனவும் எதிர்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.