பஸ்ரா அரங்கில் ஒளிரும் விழிப்புலனற்ற நடிகர்களின் திறமைகள்!
In உலகம் April 2, 2019 11:41 am GMT 0 Comments 2032 by : adminsrilanka
கலையை வளர்ப்பதற்கும், அதனை திறம்பட வௌிப்படுத்துவதற்கும் தமது திறமை மாத்திரம் போதுமானது என்ற தன்னம்பிக்கையுடன் ஒரு குழு களமிறங்கியிருக்கின்றது. கண்களில் ஔியிழந்த போதும் தங்களின் நடிப்புத் திறனால் மேடையை ஔிர வைக்க இந்த கலைஞர்கள் தவறவில்லை.
ஈராக்கின் சமகால நிலைமைகளையும், அரசியல் இரண்டக நிலைகளையும் எடுத்துக் காட்டும் விதமாக அவர்கள் நாடக திறன்களை வௌிகாட்டுகின்றனர்.
அத்துடன் குறைபாடுடையவர்களுக்கு எதிரான சமூகத்தின் எதிர்மறையான சிந்தனைகளை சுட்டிக்காட்டுவதாகவும் இவர்களின் மேடை நாடக கருப்பொருட்கள் அமைந்திருந்தன.
அலி அல்-ஷாய்பானி என்பவரின் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு, அவரின் வழிநடத்தலுக்கு அமைய ஓவர் ப்ரோவா என்ற அரங்க நாடக காட்சிகளை வௌிப்படுத்தினர்.
இதில் சில அங்கத்தவர்கள் கடந்த கால போர் சூழ்நிலையின் போது தங்களின் பார்வைகளை இழந்தவர்களாவர். அத்துடன் மேலும் சிலர் வெவ்வேறு விபத்து சம்பவங்களின் போதும், பிறப்பிலேயே பார்வையை இழந்தவர்களாக உள்ளனர்.
குறிப்பாக அலி ஹூசைன் என்ற கலைஞர் முன்னாள் பொலிஸ் அதிகாரியாக செயற்பட்டு வந்த நிலையில், வெடிக்கும் சாதனம் ஒன்றின் தாக்கத்தால் தனது பார்வையை இழந்தார். பின்னர் தனது நடிக்கும் திறமையை வௌிப்படுத்தி வருகின்றார்.
இந்த 13 கலைஞர்களும் பாபிலோன் பண்டிகை உட்பட பல முக்கிய நிகழ்ச்சிகளிலும், வெவ்வேறு நகரங்களிலும் தங்களின் ஆக்கங்களை வௌிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு