பாக். அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: மாற்றம் கலந்த நியூஸிலாந்து அணி அறிவிப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க மாற்றம் கலந்த நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில், காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னருக்கு பதிலாக மெட் ஹென்ரி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில், டொம் பிளெண்டல், ட்ரெண்ட் போல்ட், மெட் ஹென்ரி, கெய்ல் ஜேமிசன், டொம் லதம், டேரில் மிட்செல், ஹென்ரி நிக்கோல்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர், வாட்லிங், வில் யங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி 101 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.