பாடகி எஸ்.ஜானகிக்கு அறுவை சிகிச்சை
In சினிமா May 5, 2019 5:14 am GMT 0 Comments 1810 by : adminsrilanka

இடுப்பு எலும்பு முறிந்ததை அடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
இவர் சமீபத்தில் மைசூரிலுள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். அங்கு குளியல் அறையில் கீழே விழுந்ததால் அவருக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் நேற்று (சனிக்கிழமை) நண்பகல் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜானகி, ”கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கின்றேன். விரைவில் நலம்பெறுவேன். நான் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு நன்றி” என கூறினார்.
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
பாடகி எஸ்.ஜானகியின் பாடல்களை இன்றைய கால இளைஞர்களும் ரசித்து கேட்கின்றனர். எனினும் இனிமேல் பாடப்போவதில்லையென அவர் சமீபத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில்
-
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொதுமக்களின் பாவனைக்காக இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்
-
இங்கிலாந்தில் ஒரு இலட்சத்திற்கும் மேல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதையிட்டு மிகவும் வருந்துவதாக பிரித்தான
-
பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக என புள்ளி
-
ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான முதல் தொலைபேச
-
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெள
-
உலக நாடுகள் கொரோனாவை ஒழிக்க உழைத்துவருகின்றது. ஆனால் இலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிர
-
‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்
-
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்
-
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வால்வாட்சர் மற்று