பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்புவது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விடயம்
In இலங்கை November 22, 2020 3:09 am GMT 0 Comments 2100 by : Dhackshala

கொரோனாவை கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பாடசாலைகளை ஆரம்பிக்க முடியுமா என ஒத்திகை பார்ப்பதற்காக அல்ல எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர்த்து ஏனையப் பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.