பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்: கல்வி அமைச்சர்
In இலங்கை February 3, 2021 11:04 am GMT 0 Comments 1435 by : Jeyachandran Vithushan

குழந்தையின் ஆரம்ப ஆண்டுகளில் அவர்களின் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக அமையும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனவே மாணவர்கள் உணர்ச்சி ரீதியாக ஆரோக்கியமாகவும் இருக்க பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இதனை ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அவர், மன அழுத்தம் காரணமாக அதிக இறப்புகள் உலகளவில் பதிவாகின்றமையை சுட்டிக்காட்டிய அவர், தியானம் போன்ற செயற்பாடுகள் ஈடுபட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.