பா.ஜ.க.வுக்கு பயந்தே வயநாட்டை நோக்கி நகர்ந்துள்ளார் ராகுல்: அமித் ஷா
In இந்தியா April 1, 2019 9:23 am GMT 0 Comments 3236 by : Yuganthini

உத்தரபிரதேசம் மாநிலம்- அமேதி தொகுதியில், பா.ஜக.வை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்திலேயே வயநாட்டை நோக்கி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புறப்பட்டுள்ளாரென பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில், இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமித்ஷா இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராகுல், அமேதி தொகுதியிலுள்ள மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால் அவர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனரெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் தற்போது குறித்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றியடைய முடியாதென்ற காரணத்தினாலேயே ராகுல், கேரளம் நோக்கி சென்றுள்ளாரெனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அமேதி தொகுதியிலேயே ராகுல் போட்டியிட்டு வந்தார். ஆனாலும் கடந்த 2014 ஆம் ஆண்டு, நடைபெற்ற தேர்தலில் அவர் குறைந்த அளவிலான வாக்குகள் வித்தியாசத்திலேயே மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானியை வென்றார்.
இந்நிலையில் இம்முறையும் மீண்டும் ராகுலை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 563பேர் பா
-
நாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத
-
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பூரண குணமடைந்து நேற்று
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்த
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்
-
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவ
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் 108 ஆவது ஜனனதினம் நேற்று(புதன்க
-
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழ
-
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(புதன்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள