பின்லாந்தில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இலவசமாக கொவிட்-19 தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை அமைச்சகம்

பின்லாந்தில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுமென நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ ‘பின்லாந்து மக்களை உரிமம் பெற்ற கொரோனா தடுப்பூசி மூலம் பாதுகாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்கு. யாருக்கெல்லாம் விருப்பம் உள்ளதோஇ அவர்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முதல் தடுப்பூசி கிடைத்து விடும். அதைத்தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.
மருத்துவ பணியாளர்கள்இ முதியோர்இ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து போடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டு கிடைக்கப்பெற்ற பின்னரே தடுப்பூசி குறித்த இறுதி முடிவை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்து ஐரோப்பிய ஒன்றிய கொள்முதல் செய்வதில் பங்கேற்கிறது. இது பல்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்கிறது. ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் தற்போது ஆறு வெவ்வேறு தடுப்பூசிகளுக்கான விநியோக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவற்றில் ஐந்தில் பின்லாந்து பங்கேற்கிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.