பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு 76 தாய்மார்களுக்கு தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு!
In இலங்கை November 18, 2020 8:19 am GMT 0 Comments 1588 by : Vithushagan
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தாய்மார்களுக்கு தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வொன்று (‘கிரி அம்மா தானய’) இன்று ( புதன்கிழமை) முற்பகல் நாராஹேன்பிட அபயராம புரான விகாரையில் இடம்பெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இம்முறை 18ஆவது தடவையாக இந்த தாய்மார்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெறும் இந்த தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் ஏற்பாடு செய்யப்படும்.
முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், மரியாதைக்குரிய மஹா சங்கத்தினரின் ஜய பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து 76 தாய்மார்களுக்கு தானம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.