பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பிற்கு அமெரிக்க தூதுவர் வரவேற்பு
In இலங்கை February 10, 2021 12:10 pm GMT 0 Comments 1570 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட குறித்த அறிவிப்பை மேற்கோளிட்டு அலைனா டெப்லிட்ஸ் டுவிட்டரில் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும் மத சடங்கு முறைகளுக்கும் மதிப்பளிப்பது சாதகமான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.