பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கொழும்பு ஆயருக்கும் இடையில் விசேட சந்திப்பு
In இலங்கை December 18, 2020 9:54 am GMT 0 Comments 1383 by : Yuganthini

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கொழும்பு ஆயர் துசாந்த ரொட்றிகோ ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் கொழும்பு ஆயர் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி, நத்தார் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், உற்சவ காலத்தில் கிறிஸ்தவர்களையும் அனைத்து இலங்கையர்களையும் பாதுகாத்து, நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபடுதல், பாடசாலைகளை ஆரம்பித்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கொழும்பு ஆயர், இதன்போது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறையினரின் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நத்தார் பண்டிகையை கொண்டாடும் வகையில் மக்களை விழிப்பூட்டுமாறு பிரதமர் கொழும்பு ஆயரிடம் தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் கொழும்பு அனுநாயக்கர் அருட்தந்தை பெரி ப்ரோஹியர், கொழும்பு மறைமாவட்ட செயலாளர் ராஜன் ஆசீர்வாதம் உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சட்ட அதிகாரி ரொஹான் எதிரிசிங்க, அருண் கமலத்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.