பிரதமர் மோடி தமிழகத்திற்கு விஜயம் செய்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14ஆம் திகதி தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்று அழைப்பு விடுத்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டமான, வண்ணாரப் பேட்டை – திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அத்துடன், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், மேலும் பல திங்டங்களையும் அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.