பிரதேச சபையின் அவசரத் தேவைகள் உடன் தீர்க்கப்படும் – ஹிஸ்புல்லா
In இலங்கை April 10, 2019 4:54 am GMT 0 Comments 2143 by : Dhackshala
திருகோணமலை – மொரவெவ பிரதேச சபையின் அவசரத் தேவைகள் உடன் தீர்க்கப்படும் என ஆளுநர் ஹிஸ்புல்லா உறுதியளித்துள்ளார்.
மொரவெவ பகுதியில் அமைக்கப்பட்ட W.R.றம்பண்டா ஞாபகார்த்த மண்டபம் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.
பிரதேச சபையின் தவிசாளர் சங்கைக்குரிய பொல்ஹோயன் கொட உபரத்தின தேரர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாக பங்கேற்று மண்டபத்தின் பெயர் பலகையினை திரை நீக்கம் செய்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து மொரவெவ பிரதே சபையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன், பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்வி, சுகாதாரம் மற்றும் சபையின் அவசியத்தேவைகள் குறித்து பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆளுநர் கவனத்திற்கு கொண்டுச்சென்றனர்.
இதனையடுத்து அவசரமாக தீர்க்கப்படவேண்டிய தேவைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்ச
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உ
-
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்
-
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
-
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொ
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவி
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத