பிரான்ஸின் கொவிட்-19 தடுப்பூசி 2021ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்கு முன்னர் தயாராகாது: SANOFI

2021ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்கு முன்னர் கொவிட்-19 தடுப்பூசி தயாராகாது என பிரான்ஸின் மருந்துத் தயாரிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான SANOFI அறிவித்துள்ளது.
SANOFI நிறுவனமானது GSK (GlaxoSmithKline) எனும் பிரித்தானிய ஆய்வு நிறுவனத்தின் கூட்டு முயற்சியிலேயே கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி ஆய்வினை மேற்கொண்டு வருகின்றது.
முதற்கட்ட மருத்துவ ஆய்வின் பெறுபேறுகளும், நோயாளிகள் மீது மேற்கொண்ட சோதனைகளும் திருப்திகரமாக வெற்றியளிக்கவில்லை என்ற காரணத்தினால், இந்தத் தயாரிப்பு 2021இன் கடைசிப் பகுதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதியவர்களின் மீது மேற்கொண்ட தடுப்பூசிப் பரிசோதனையில், கொரோனாவிற்கான எதிர்ப்பு சக்தி உருவாகுவற்கான காலம் மிக நீண்டதாக இருப்பதால், ஆராய்ச்சியை மேம்படுத்தி வெளியிடுவதற்குக் காலதாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எதிர்வரும் வாரங்களில் பிரான்ஸில் கொரோனத் தொற்று மிக அதிகமாகும் பெரும் ஆபத்து உள்ளதென என பிரான்ஸின் பொதுமக்கள் சுகாதார நிறுவனமான Santé publique France எச்சரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.