பிரான்ஸிலும் அடையாளங்காணப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ்!

பிரித்தானியாவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பிரான்ஸிலும் இனங்காணப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து கடந்த 19ஆம் திகதி பிரான்ஸ் திரும்பிய நபருக்கே இந்த புதிய ரக வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அது பிரித்தானியால் மரபியல் மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட மேலும் பலருக்கும் உருமாற்ற கொரோனா பாதிப்பு உறுதியாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய நாடுகளுக்கான பிராந்திய இயக்குநர் ஹன்ஸ் க்லுகே கூறுகையில், ‘உலக சுகாதார அமைப்பு நிலமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை மேலும் தீவிரம் ஆக்குவது அவசியம். புதிய வகை கொரோனா இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது’ என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.