பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை!
In இந்தியா January 28, 2021 2:58 am GMT 0 Comments 1395 by : Krushnamoorthy Dushanthini

பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டுள்ளன.
ஏற்கனவே 8 விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ள நிலையில், மேலும் 3 விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) புறப்பட்டுள்ளன. குறித்த விமானங்கள் இடையில் எங்கும் நிற்காமல் இந்தியா வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவானில் எரிபொருள் நிரப்புவதற்காக ஐக்கிய அரபு அமீரக விமானப் படையின் டேங்கர் விமானம் உதவி செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 3 விமானங்கள் இணைய இருப்பது இந்திய விமானப்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று பிரான்ஸிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு கையெழுத்தானமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.