பிரான்ஸில் திடீரென தன்னார்வலர்களால் அமைக்கப்பட்ட அகதி முகாம்கள்!

பிரான்ஸில் திடீரென பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் இணைந்து, அகதி முகாம்களை அமைத்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Place de la République என்ற பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை மாலை 7 மணி அளவில் இங்கு வந்து சேர்ந்த பல நூறு வரையான தன்னார்வ தொண்டர்கள், சிறிய கூடாரங்களை அமைத்து அதற்குள் இருந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கிருந்த கூடாரங்களை அப்புறப்படுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கடந்த வார இறுதியில் செந்தனியில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை அரசாங்கம் வெளியேற்றியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அகதிகளுக்கான போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் அவர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக குற்றம் சாடிய அமைப்பினர், விரைவில் அவர்களுக்கான பாதுகாப்பான தங்குமிடத்தை அமைத்துக்கொடுக்கும் படியும் கோரினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.