பிரான்ஸில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதிய ரக வைரஸ்!

தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதிய ரக வகை கொரோனா வைரஸ் (கொவிட்-19) பிரான்ஸில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் சில காலம் தங்கிவிட்டு, அண்மையில் தாயகம் திரும்பிய பிரான்ஸ் நாட்டவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இந்த புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதில், அவரைத் தவிர வேறு யாருக்கும் புதிய வகை கொரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை என்பது தெரியவந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரான்ஸில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 26இலட்சத்து 39ஆயிரத்து 773பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 64ஆயிரத்து 765பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.