பிரான்ஸில் 20 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்று!
In ஐரோப்பா February 7, 2021 5:29 am GMT 0 Comments 1302 by : Jeyachandran Vithushan

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கு முந்தைய நாள் 22 ஆயிரத்து 139 ஆக பதிவாகியதாகவும் தற்போதையை இந்த எண்ணிக்கை கொரோனா தொற்றின் நாளாந்த வீழ்ச்சியைக் காட்டுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவிர சிகிச்சையில் உள்ள கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 225 ஆக குறைந்துள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை விதிக்கும் படியான சுகாதார நிபுணர்களின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.