பிரித்தானியாவின் எதிர்காலத்தில் அணு உற்பத்தியின் பங்கு: முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று
In இங்கிலாந்து November 9, 2020 6:02 am GMT 0 Comments 2350 by : Sukinthan Thevatharsan

பிரித்தானியாவின் எதிர்கால வலு வியூகத்தில் (energy strategy) அணு உற்பத்தியின் பங்களிப்பு தொடர்பாக பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரித்தானிய சான்சிலர் மற்றும் வர்த்தக செயலாளர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 2050ம் ஆண்டில் பிரித்தானியாவை காபன் வெளியீடற்ற நாடாக மாற்றும் 10 திட்டத்தில் குறித்த விடயம் உள்வாங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மேலும் குறித்த சந்திப்பு தொடர்பான அறிக்கை அடுத்த வாரமளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியா அணு உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் தொடந்து ஈடுபட வேண்டுமென அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
மேலும் அணு உற்பத்தி நிலையங்களானது காபன் அற்ற பிரித்தானிய மின்சாரப் பங்கீட்டு திட்டத்தின் மிக முக்கிய பங்கு எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.