பிரித்தானியாவின் ஒக்டோபர் மாதத்தில் மந்தமான பொருளாதார வளர்ச்சி!
In இங்கிலாந்து December 10, 2020 8:00 am GMT 0 Comments 1694 by : Anojkiyan

பிரித்தானியாவில் ஒக்டோபர் மாதம் மந்தமான பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் பிரித்தானியாவின் பொருளாதாரம் வெறும் 0.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது என்று தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் கொரோனா வைரஸ் முடக்கநிலையால் தூண்டப்பட்ட சாதனை சரிவிலிருந்து பிரித்தானியா மீண்டு வருகிறது.
ஆனால் பிரித்தானியாவின் இரண்டாவது முடக்கநிலை, நிறுவனங்களை மூடுவதற்கு கட்டாயப்படுத்திய பின்னர் நவம்பர் மாதத்தில் பொருளாதாரம் மீண்டும் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பிரித்தானிய பொருளாதாரம் தொற்றுநோய்க்கு முந்தைய உச்சநிலையை விட 8 சதவீதம் கீழே உள்ளது.
இதுகுறித்து ஓஎன்எஸ் துணை தேசிய புள்ளிவிபர நிபுணர் ஜொனாதன் அதோவ் கூறுகையில், ‘பொது சேவை வெளியீடு அதிகரித்தது. அதே நேரத்தில் கார் உற்பத்தி தொடர்ந்து மீண்டு வந்தது. சில்லறை விற்பனை மீண்டும் வலுவாக வளர்ந்தது.
இருப்பினும், சில கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தியதன் மூலம் சேவைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. விருந்தோம்பலில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. அதாவது பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக மிதமாக வளர்ந்தது’ என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.