பிரித்தானியாவின் பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில் மூன்று நாடுகள் சேர்ப்பு!
In இங்கிலாந்து January 29, 2021 10:12 am GMT 0 Comments 1836 by : Anojkiyan

பிரித்தானியாவின் பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில், ஐக்கிய அரபு அமீரகம், புருண்டி மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்க புதிய மாறுபாட்டின் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை 13:00 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.
பிரித்தானியாவில் வசிக்கும் உரிமை கொண்ட பிரிட்டிஷ், ஐரிஷ் மற்றும் மூன்றாம் நாட்டு பிரஜைகள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
பிரித்தானியா ஓய்வு பயணங்களுக்கு தடை விதித்த போதிலும், பல சமூக ஊடக செல்வாக்கு பெற்றவர்கள் சமீபத்திய வாரங்களில் டுபாய்க்கு விஜயம் செய்துள்ளனர்.
தங்களது பயணங்கள் பணி நோக்கங்களுக்காக என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் வழக்கமாக எந்தவொரு பயண விலக்குகளும் வணிகப் பயணம் உட்பட பொருந்தாது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடி பயணிகள் விமானங்களுக்கு விமான தடை விதிக்கப்படும்.
2020ஆம் ஆண்டு நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் பிரபலமான இடமாக இருந்தது, 84,500 பயணிகள் நாட்டிலிருந்து மற்றும் வெளிநாடுகளுக்கு பயணித்ததாக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியா (54,000), கட்டார் (38,000) மற்றும் வியட்நாம் (36,000) ஆகியவை பிற பிரபலமான இடங்களாகும்.
பிரித்தானியாவின் பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில், தற்போது 33 நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.