பிரித்தானியாவின் ராணி- இளவரசர் கொவிட்-19 தடுப்பூசி பெற்ற முதல் நபர்களாக இருப்பார்கள்!
In இங்கிலாந்து December 7, 2020 8:49 am GMT 0 Comments 1755 by : Anojkiyan

பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகியோர் கொவிட்-19 தடுப்பூசி பெற்ற முதல் நபர்களாக இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, அரச உதவியாளர்கள் தடுப்பூசி பெறுவது ஒரு தனிப்பட்ட முடிவு மற்றும் தனிப்பட்ட விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பிரித்தானியா முழுவதும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைசர்- பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசிக்கு பிரித்தானியா, டிசம்பர் 2ஆம் திகதி ஒப்புதல் அளித்தது. இதன்படி, முதல் சுற்று தடுப்பூசிகள் டிசம்பர் 8ஆம் திகதி முதல் போடப்படும் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.
80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்னணி சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு தொழிலாளர்கள், பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்களுக்குப் பிறகு இரண்டாவது முன்னுரிமைக் குழுவாக உள்ளனர்.
பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்கள், சுகாதாரம் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் மருத்துவ ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களில் உள்ளனர். மேலும் தடுப்பூசியை முன்னுரிமை அடிப்படையில் பெறுவார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.