பிரித்தானியாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் தளர்வு: பிரான்ஸ் அறிவிப்பு

பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்று, 48 மணிநேரத்துக்குள் அங்கிருந்து மீண்டும் பிரான்சுக்குள் வந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி முதற்கட்டமாக பார ஊர்தி சாரதிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியில் இருந்து இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கனரக வாகன சாரதிகளுக்கு இந்த பி.சி.ஆர். பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.