பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுள்ளனர்!
In இங்கிலாந்து January 19, 2021 11:55 am GMT 0 Comments 1852 by : Anojkiyan

பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
70களில் உள்ளவர்கள் மற்றும் இங்கிலாந்தில் மருத்துவ ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் இப்போது தடுப்பூசி வழங்கப்படுபவர்களில் உள்ளனர்.
எவ்வாறாயினும், சுகாதார செயலாளர் மாற் ஹான்காக், பிரித்தானியாவின் தரவு முன்னெப்போதையும் விட அதிகமான மக்கள், கொவிட் மருத்துவமனையில் இருப்பதாக காட்டியது.
இதுதொடர்பாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் மேலும் கூறுகையில், ’80 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.