பிரித்தானியாவில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா , 519 இறப்புகளும் பதிவு
In இங்கிலாந்து December 13, 2020 7:15 am GMT 0 Comments 1624 by : Jeyachandran Vithushan

பிரித்தானியாவில் நேற்று (சனிக்கிழமை) புதிதாக 21 ஆயிரத்து 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அத்தோடு 28 நாட்களுக்குள் 519 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து பிரித்தானியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 18 இலட்சத்து 30 ஆயிரத்து 956 ஆக உயர்ந்துள்ளது.
அத்தோடுகொரோனா தொற்று காரணமாக 64 ஆயிரத்து 26 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை 21 ஆயிரத்து 672 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 424 இறப்புகளும் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.