பிரித்தானியா பயணத் தடை: ஜனவரி தொடக்கம் வரை நீடிக்குமென பிரதமர் அறிவிப்பு!

கனடாவின் பிரித்தானியா பயணத் தடை ஜனவரி தொடக்கம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இது மிகவும் தீவிரமான தொற்றுநோயாக இருப்பதாக நம்பப்படுவதால், தடை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பிரதமர் ட்ரூடோ தனது கருத்துக்களில், இது வெளிநாட்டிற்கு செல்லும் விடுமுறைக்கான நேரம் அல்ல என்றும் கூறினார்.
நீங்கள் சமீபத்தில் பிரித்தானியாவிலிருந்து வந்திருந்தால், கனடா அரசாங்கம் மேலும் வழிகாட்டுதல்களை செயற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.