பிரித்தானியா மூன்றாவது கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி!
In இங்கிலாந்து January 9, 2021 7:05 am GMT 0 Comments 2083 by : Anojkiyan

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா, மூன்றாவது கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கும் அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க நிறுவனமான மொடர்னா நிறுவன தடுப்பூசிக்கு பிரித்தானிய மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு, அனுமதி அளித்துள்ளது.
ஏற்கெனவே ஃபைஸர்- பயோஎன்டெக், ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தடுப்பூசிகளுக்கு பிரித்தானியா அனுமதி அளித்திருந்தது.
இதுகுறித்து பிரித்தானிய மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகக் கடுமையான அலசலுக்குப் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ், மொடர்னா தடுப்பூசியும் பொதுமக்களுக்குச் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.