பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள 600000 க்கும் அதிகமான ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள்!
In இங்கிலாந்து May 3, 2019 10:26 am GMT 0 Comments 3005 by : shiyani

பிரெக்ஸிற்றுக்கு பின்னரும் பிரித்தானியாவில் வசிப்பதை உறுதிசெய்வதற்காக 600000 க்கும் அதிகமான ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தமொன்றுடனான பிரெக்ஸிற்றின்போது 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்னரும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின்போது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவேண்டியது அவசியமாகும்.
பிரித்தானிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி ஒன்றின் ஊடாக இந்த செயல்முறையை மேற்கொள்ளமுடியும். இந்த செயலி ஊடாக 95 சதவிகிதமானோர் வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
ஆனாலும் தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களும் வயோதிபர்களும் இந்த செயலியை பயன்படுத்துவதற்கு சிரமப்படுவார்களென தொண்டுநிறுவனங்கள் விமர்சித்துள்ளன.
குடியுரிமை விண்ணப்பங்களில் பெரும்பகுதியான 37742 விண்ணப்பங்கள் ரொமேனிய குடிமக்களிடம் பெறப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து இத்தாலிய குடிமக்களிடமிருந்து 28575 விண்ணப்பங்களும், போலந்து குடிமக்களிடமிருந்து 28214 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்தாபக மாநிலங்களான பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் நாடுகளை சேர்ந்த குடிமக்களிடமிருந்து முறையே 11583 விண்ணப்பங்களும் 10825 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.