பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கையோடு இன்று (வெள்ளிக்கிழமை) சிவசேனாவில் இணைந்தார்.
காங்கிரஸில் இருந்து விலகியதன் பின்னர், மும்பை சென்ற பிரியங்கா சதுர்வேதி, அங்குள்ள சிவசேனா கட்சித் தலைமையகத்தில் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மற்றும் கட்சியின் ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வந்தவர் பிரியங்கா சதுர்வேதி. இவர் சில நாட்களுக்கு முன் மதுராவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது சில காங்கிரஸ் நிர்வாகிகள் அவரிடம் தவறாக நடந்து கொண்டனர். ஆனால் அவர்கள் நீக்கப்பட்டு, பின்னர் தேர்தலுக்காக மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.
இதனால் அதிருப்தியடைந்த பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார். தன்னிடம் தவறாக நடந்துகொண்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்ற அதிருப்தியால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கையோடு பிரியங்கா சதுர்வேதி, சிவசேனா கட்சியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.