பிரெக்சிற்றுக்குப் பின்னரான வர்த்தக ஒப்பந்தம்- இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்!
In இங்கிலாந்து December 30, 2020 4:49 pm GMT 0 Comments 2072 by : Litharsan

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிற்றுக்குப் பின்னரான வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவில் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வர்த்தக ஒப்பந்தம் வரும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
இந்த வரைபு கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எட்டப்பட்ட புதிய உறவுக்கான ஒப்பந்தத்தை சட்டமாகக் கொண்டுவருகிறது.
பிரெக்சிற் வாக்கெடுப்பு நடந்து நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் நாளைய தினத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பிரித்தானியா துண்டிக்கிறது.
இதனிடையே, ஒன்பது மாதங்களுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான வர்த்தக ஒப்பந்தம் வணிக மற்றும் பாதுகாப்பு உறவை தொடர்ந்து பேண உதவுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.