பிரெக்சிற் ஒப்பந்தத்தை எட்டுவதில் மூன்று பிரச்சினை – வான் டெர் லேயன்
In இங்கிலாந்து December 6, 2020 4:14 am GMT 0 Comments 2148 by : Jeyachandran Vithushan

பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து முக்கியமான மூன்று பிரச்சினைகள் காணப்பட்டாலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் நேற்று (சனிக்கிழமை) தொலைபேசி மூலம் கலந்துரையாடிய பின்னர் கருத்து வெளியிட்டுள்ள உர்சுலா வன் டெர் லேயன், பல பகுதிகளில் முன்னேற்றம் அடைந்துள்ளபோதும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் ஒரு ஒப்பந்தத்தைத் தடுக்கின்றன என ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் நேற்று அறிக்கை வெளியிட்டன.
குறிப்பாக சட்டம் மற்றும் மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் எந்தவொரு உடன்பாட்டிருக்கும் சாத்தியமில்லை என பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒருமித்த கருத்துக்களில் உள்ளன.
இந்நிலையில் பிரித்தானியாவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தலைமை பேச்சாளர்கள் பிரஸ்ஸல்ஸில் இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கூடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.