பிரெக்ஸிட்டுக்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் இன்று வெளியீடு!
In இங்கிலாந்து December 24, 2020 6:26 am GMT 0 Comments 2004 by : Anojkiyan

பிரெக்ஸிட்டுக்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதுதொடர்பான முக்கிய தகவல்கள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையிலான, குறித்த பேச்சுவார்த்தைகள் நேற்று இரவு நேரம் வரை நீடித்திருந்த நிலையில், கடந்த பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாது காணப்பட்ட மீன்பிடி ஒதுக்கீடு தொடர்பான விடயங்களை முடிவுக்கு கொண்டுவர எண்ணியுள்ளதாக இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது அமைச்சரவையில் தெரிவித்த கருத்துக்களுக்கான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய அரச தரப்பு மேலும் நம்பிக்கையுடன் காணப்படுவதாக பி.பி.சி. செய்தி சேவை தெரிவித்துள்ளது.
குறித்த ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது என பல தரப்புக்களாலும் ஊகிக்கப்பட்ட நிலையில், இது குறித்து டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் எரிக் மேமர், குறித்த பேச்சுவார்த்தைகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானியாவின் பன்னைப்பொருட்கள் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பேச்சுவார்த்தையின் மூலம், இறக்குமதி வரி, இரு தரப்புக்களினதும் உற்பத்திப்பொருட்கள் மீதான வரிகள் ஆகியவற்றை ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுல்படுத்துவது தொடர்பிலான இரு தரப்புக்களினதும் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.