பிரெக்ஸிற்றால் ஏற்றுமதி துறை பாதிக்கப்படக்கூடாது: ஸ்கொட்லாந்து
In இங்கிலாந்து April 7, 2019 5:30 am GMT 0 Comments 2831 by : Varshini

உடன்பாடற்ற பிரெக்ஸிற் தொடர்பாக செயற்படும்போது, ஸ்கொட்லாந்தின் ஏற்றுமதி குறித்து முன்னுரிமையின் அடிப்படையில் செயற்பட வேண்டுமென அந்நாட்டு போக்குவரத்து செயலாளர் மைக்கல் மத்தேசொன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் கிறிஸ் கிரேய்லிங்கிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக ஸ்கொட்லாந்து கடல் உணவுகள் ஏற்றுமதியின்போது, படகுச்சேவைக்கு இடமளிக்கப்படவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உடன்பாடற்ற பிரெக்ஸிற்றினால் ஏற்றுமதி பாதிக்கப்படும் பட்சத்தில், வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். இந்நிலையில், இதுகுறித்து கவனத்திற்கொள்ள வேண்டுமென ஸ்கொட்லாந்து போக்குவரத்து செயலாளர் கூறியுள்ளார்.
நாட்டின் வருடாந்த வருமானமான 944 மில்லியன் பவுண்ட்ஸ்களில், 58 வீதமானவை ஸ்கொட்லாந்து உணவு ஏற்றுமதியின் மூலமே கிடைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இவற்றை கருத்திற்கொண்டு, உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின்போது போதுமான உத்தரவாதங்களை பெற்றுக்கொண்டு செயற்படுவது அவசியம் என அவர் பிரித்தானியாவை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பேரழிவுகரமான கொவிட்-19 எழுச்சிக்கு மத்தியில் போர்த்துகலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனா
-
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் பதிவான 427 வீதி விபத்துக்களி
-
இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், ஜனா
-
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்
-
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி – மீ
-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி ட்ராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். சிங
-
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகாிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்
-
நாட்டின் 72ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோ
-
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்
-
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்று (செவ்வாய்