பிரெக்ஸிற்றினால் பாதிக்கப்படும் அச்சத்தில் டென்மார்க் மீனவர்கள்!
In இங்கிலாந்து May 1, 2019 6:37 am GMT 0 Comments 2945 by : Risha

பிரெக்ஸிற்றினால் தாம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என டென்மார்க் மீனவ சமூகத்தினர் அச்சம் கொண்டுள்ளனர்.
டென்மார்க் வடமேற்கு கரையோரத்தில் உள்ள சிறிய மீன்பிடி நகரமான தைபோறொன் மக்களே இவ்வாறு அச்சமடைந்துள்ளனர்.
பலமீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக பிரித்தானியக் கடற்பரப்பையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் பிரித்தானிய கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபடுவதும் பாதிக்கப்படும் என மீனவ சமூகத்தினர் அஞ்சுகின்றனர்.
மீன்பிடியை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட டென்மார்க்கை சேர்ந்த ஒரு தந்தையும் மகனும் ஆண்டுதோறும் மீன்பிடியின் ஊடாக 3.75 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் மூன்றில் ஒருபகுதி பிரித்தானியக் கடற்பரப்பிலிருந்து பிடிக்கப்படும் மீன்களினால் ஈட்டப்படுன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மட்டக்களப்பு மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர்
-
சுகாதார நடைமுறைத் தளர்வுகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யாது தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வக
-
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றில், இன்ற
-
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை 2,500ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக, பென்டகன் தெரிவித்
-
உழைப்பின் கௌரவத்தை பாதுகாக்கும் மற்றும் திறமையான சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய
-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, மதுரையில் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
-
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை அறிவித்துள்ளார். அந்நாட
-
ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ளத் தலைமை மருந்துக்
-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து இதுவரை 12 ஆயிரத்து 329 கைதிகள் விடுவிக்கப்பட்டு
-
ஒன்றாரியோவில் இரண்டாம் கட்டம் முடிவதற்குள், 8.5 மில்லியன் மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க