பிரெக்ஸிற்றை தீர்ப்பதே உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடு: பிரதமர்
In இங்கிலாந்து May 3, 2019 2:16 pm GMT 0 Comments 2479 by : shiyani

பிரெக்சிற்றுக்கு உடனடி தீர்வு காணவேண்டும் என்பதே உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளின் மூலமாக கொன்செர்வேற்றிவ் மற்றும் தொழிற்கட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கும் செய்தியாகுமென பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நூற்றுக்கணக்கான ஆசனங்களை தவறவிட்டுள்ள நிலையில் வேல்ஸில் இடம்பெற்ற டோரி உச்சிமாநாட்டில் கணைத்துக்கொண்டு பேசிய பிரதமர் கூறியதாவது;
உண்மையிலேயே வரலாற்று ரீதியான ஏதாவது ஒன்றை வழங்குவதற்கான பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
நேற்றைய தேர்தலின் முடிவுகள் எமக்கும் தொழிற்கட்சிக்கும் ஒரே செய்தியைத்தான் கொண்டிருக்கிறது என நான் நினைக்கிறேன். பிரெக்சிற்றுக்கு உடனடித் தீர்வு காண்பதே அந்த செய்தியாகும்.
எமது உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பயனளிக்கக்கூடிய பிரெக்ஸிற்றை நாம் பெறவேண்டும். எமது விநியோக சங்கிலியை தொடரக்கூடியதாகவும் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நாம் ஏற்கனவே எட்டியுள்ள பிரெக்ஸிற் ஒப்பந்தம் இவற்றையும் வழிவகுக்கக்கூடியதாகும். ஆனால் உடன்படிக்கை எதுவுமின்றி வெளியேறுவது இவற்றுக்கு வழிவகுக்காது என பிரதமர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.