பிரெக்ஸிற்றை ரத்து செய்வதைவிட ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் சிறந்தது: ஹண்ட்
In இங்கிலாந்து April 25, 2019 3:13 pm GMT 0 Comments 2644 by : shiyani

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் மற்றும் பிரெக்ஸிற்றை ரத்து செய்தல் ஆகிய இரண்டில் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றே சிறந்தது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய ஹண்ட் கூறியதாவது;
உடன்பாடற்ற பிரெக்ஸிற் மற்றும் பிரெக்ஸிற் ரத்து ஆகியவற்றில் ஒன்றை நான் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றையே நான் தேர்ந்தெடுப்பேன்.
ஏனெனில் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றால் ஏற்படக்கூடிய பொருளாதார அபாயத்தைவிட பிரெக்ஸிற்றை ரத்துச்செய்வதால் ஏற்படக்கூடிய ஜனநாயக அபாயம் உயர்ந்தது என நான் நினைக்கிறேன்.
ஆனாலும் ஒப்பந்தம் எதுவுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கு பாராளுமன்றம் அனுமதிக்கும் என நான் நம்பவில்லை.
நானும் ஒப்பந்தமொன்றுடன் வெளியேறுவதையே விரும்புகிறேன் ஏனெனில் ஒப்பந்தம் இல்லாவிட்டால் இடையூறுகள் ஏற்படலாமென நான் நம்புகிறேன்.
அந்த இடையூறுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையும் அதனால் விவேகம் உள்ள எவரும் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை தவிர்க்கவே விரும்புவார்கள்.
பிரெக்ஸிற் காரணமாக பிரித்தானியாவில் நிலவும் நெருக்கடிநிலை மற்றைய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவது பெரிய தவறாக அமையும்.
பிரெக்ஸிற்றைப் பொறுத்தவரையில் எனது இலக்கு ஒன்றுதான். நாங்கள் விரைவாக, ஒழுங்கான முறையில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என ஹண்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.