பிரெக்ஸிற் தாமதம் தொடர்பாக ஐரோப்பியத் தலைவர்களின் நிலைப்பாடு!
In இங்கிலாந்து April 10, 2019 3:15 pm GMT 0 Comments 2621 by : shiyani

பிரெக்ஸிற்றின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இன்று பிரஸ்ஸல்ஸில் இடம்பெறும் உச்சிமாநாடொன்றில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்று உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரஸ்ஸல்ஸ் வந்தடைந்துள்ள ஐரோப்பிய தலைவர்கள் பிரெக்ஸிற்றை பிற்போடுவது குறித்த தமது நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரெக்ஸிற்றை நீடிப்பது இன்னும் நிச்சயமற்றது எனவும் பிரெக்ஸிற் தாமதத்துக்கான அர்த்தம் என்ன என்பது தெளிவற்றதாகவே உள்ளதெனவும் பெல்ஜிய பிரதமர் சார்ள்ஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.
இன்றைய பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கான தீர்வை கண்டறிவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது எனவும் டச்சு பிரதமர் மார்க் ருட்டே தெரிவித்தார்.
மேலும் பிரெக்ஸிற்றை எவ்வளவு காலத்துக்கு நீடிப்பது என்பது குறித்து இன்றைய உச்சிமாநாட்டில் விவாதிக்கப்ப்படுமெனவும் ருட்டே தெரிவித்துள்ளார்.
ஒழுங்கான பிரெக்ஸிற்றை உறுதி செய்வதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்ய வேண்டுமென டானிஷ் பிரதமர் லார்ஸ் லோக்கி ராஸ்முசென் தெரிவித்துள்ளார்.
நெகிழ்வுத் தன்மையுடைய பிரெக்ஸிற் தாமதத்துக்கான ஐரோப்பிய கவுன்சில் தலைவரின் பரிந்துரை சிறந்தது என செக் பிரதமர் அண்ட்ரேஜ் பபிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திட்டம் தற்போதைய நிலையை அமைதிப்படுத்துமெனவும் தாம் என்ன செய்யவேண்டுமெனபதை தீர்மானிப்பதற்குத் தேவையான நேரத்தை பிரித்தானியாவுக்கு வழங்குமெனவும் பபிஸ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.