பிரெக்ஸிற் தொடர் தோல்விகளுக்கு மத்தியில் அடையாள வாக்கெடுப்பு
In இங்கிலாந்து April 1, 2019 8:25 am GMT 0 Comments 3346 by : Risha
பிரெக்ஸிற் வாக்கெடுப்பின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து, பிரித்தானிய பாராளுமன்றில் அடையாள வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பில் ஐரோப்பிய சுங்க ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பது தொடர்பாக, இன்றைய வாக்கெடுப்பில் ஒரு சமரசம் எட்டப்படும் என சட்ட வல்லுநனர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வாரம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ள நிலையிலேயே இன்று இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
பிரதமரின் அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் தொழிற்கட்சியின் முயற்சிக்கு மத்தியில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதேவேளை, பிரெக்ஸிற் நடவடிக்கையானது வெறுமனே காலத்தை வீணடிப்பது எனவும் தொழிற்கட்சி விமர்சித்துள்ளது.
எவ்வாறாயினும், பிரெக்ஸிற் தொடர்பாக காணப்படும் சிக்கல்களை நீக்கி அடுத்தகட்ட நகர்வை முன்னெடுக்கும் முயற்சியில் பிரதமர் தெரேசா மே தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகின்றார். குறித்த திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை தவிர்த்து, ஒப்பந்தத்தை நிறைவேற்றிக்கொள்வதே பிரதமரின் இலக்காகும்.
இந்நிலையில், பிரதமர் மே பாராளுமன்றத்தை புறக்கணித்துச் செயற்படக்கூடாது என நீதி அமைச்சர் டேவிட் கோக் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிற்றிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால், அதனை பிரதமர் மே தடுக்கக்கூடாது என்றும் அவ்வாறு தடுப்பது உகந்தாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார்;.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.