பிரெக்ஸிற்: நிபந்தனைகளுடன் காலநீடிப்பு வழங்க சாத்தியம்!
In இங்கிலாந்து April 10, 2019 5:14 am GMT 0 Comments 2569 by : Varshini
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியம் இன்று (புதன்கிழமை) தீர்மானிக்கவுள்ளது.
பிரெக்ஸிற் திட்டத்திற்கு எவ்வித உடன்பாடும் இதுவரை எட்டப்படாத நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதியுடன் அதற்கான கால அவகாசம் நிறைவடைகின்றது. எனினும், ஜூன் மாதம் 30ஆம் திகதிவரை காலநீடிப்பை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரதமர் மே கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், இன்று கூடவுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நிபந்தனையுடனான கால அவகாசத்தை வழங்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஒன்றியத்தின் முக்கிய தலைவர்களான பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்கல் ஆகியோரை பிரதமர் தெரேசா மே சந்தித்து கலந்துரையாடினார். எனினும், அவரது திட்டத்திற்கு குறித்த இரு தலைவர்களும் ஆதரவளித்தார்களா என்பது தொடர்பான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு
-
நாட்டில் மேலும் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள