பிரெக்ஸிற்: நியாயமான தாமத காலத்தை வழங்க மேர்கல் தயார்!
In இங்கிலாந்து April 10, 2019 12:03 pm GMT 0 Comments 3083 by : shiyani

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு தமது வெளியேற்றத்தை ஒழுங்கான முறையில் செயற்படுத்துவதற்காக பிரித்தானியாவுக்கு நியாயமான அளவு கால நீடிப்பு வழங்கப்பட வேண்டுமென ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்கல் வலியுறுத்தியுள்ளார்.
ஆனாலும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யால் முன்வைக்கப்பட்டுள்ள ஜூன் 30 வரையிலான தாமதத்தை விட நீண்டதாகவே காலநீட்டிப்பு அமையுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இருதரப்பினரும் இணைந்து பிரெக்ஸிற் தீர்வொன்றை எட்டுவதற்கு போதிய அளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமென தமது அரசாங்கம் எண்ணுவதாகவும் மேர்கல் கூறினார்.
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் ஜெர்மனி அதிபர் அங்கெலா மேர்கல் இடையே நேற்று இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்தே மேர்கல் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரெக்ஸிற்றை மேலும் பிற்போடுவதற்கு ஐரோப்பிய தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இன்று பிரஸ்ஸல்ஸில் இடம்பெறும் உச்சிமாநாட்டின் போது இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்