பிரெக்ஸிற் : பிரித்தானியாவின் நகர்விற்கு ஜப்பான் பாராட்டு
In இங்கிலாந்து April 15, 2019 5:49 am GMT 0 Comments 2769 by : Varshini
உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைத் தவிர்ப்பதற்கு பிரித்தானியா முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை ஜப்பான் வரவேற்றுள்ளது.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜெரமி ஹண்ட், அந்நாட்டுப் பிரதமர் ஸின்ஸோ அபேயை நேற்றுச் (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்தார். இதன்போது பிரெக்ஸிற் தொடர்பாகவும் கவனஞ்செலுத்தப்பட்டது.
உடன்பாடற்ற பிரெக்ஸிற்றினால் ஏற்படும் பாதகவிளைவுகளைத் தவிர்ப்பதற்காகவே பிரித்தானியா செயற்படுவதாக ஹண்ட் இதன்போது குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னரும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் தடையின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துமாறு ரொயொட்டா உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஜப்பானின் கார் உற்பத்தி நிறுவனமான ரொயொட்டா அதன் உற்பத்திகளை தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கு தடையின்றி – வரியின்றி மேற்கொள்வதை ஹண்ட் உறுதிப்படுத்த எதிர்பார்த்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக நீண்டகால வர்த்தக மற்றும் முதலீட்டு உறவை ஜப்பான் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றி ஆரம்பித்த
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்க
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள
-
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு