பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதாக தொழிற்கட்சி மீது குற்றச்சாட்டு!
In இங்கிலாந்து April 24, 2019 8:56 am GMT 0 Comments 2711 by : shiyani

ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இடம்பெற்று வரும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதாக தொழிற்கட்சி மீதும் அக்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் மீதும் பிரதமர் தெரேசா மே குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை குறித்த தனது விரக்தியை வெளிப்படுத்திய பிரதமர் பேச்சுவார்த்தைகளின் சில பகுதிகள் மிகவும் கடினமானதாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மே மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பங்கெடுப்பதைத் தவிர்ப்பதற்காக அதற்கு முன்னதாகவே பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கு பிரதமர் முயற்சி செய்து வருகிறார்.
ஆனாலும் மே 22 ஆம் திகதிக்கு முன்னதாக பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்ட முடியாதவாறு தொழிற்கட்சி பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்து வருவதாக பிரதமர் நேற்று குற்றம்சாட்டியுள்ளார்.
பல வாரங்களாக கொன்சர்வேற்றிவ் கட்சி அமைச்சர்களுக்கு தொழிற்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே முன்னெடுக்கப்பட்டு வரும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.