மீள்பயன்பாடு அற்ற பிளாஸ்ரிக்கை நிறுத்த கிரீன்ஸ்பீஸ் அமைப்பு வலியுறுத்தல்!
In ஐரோப்பா April 17, 2019 10:03 am GMT 0 Comments 2132 by : adminsrilanka

உலகளவில் பெரும் பூதாகரமாக மாறியுள்ள மீள்பயன்பாடு அற்ற பிளாஸ்ரிக்கின் பாவனையை நிறுத்துவது தொடர்பாக கிறீன்பீஸ் என்ற சுற்றாடல் அமைப்பு போராடி வருகின்றது.
இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) சுவிட்ஸர்லாந்தின் வெவெய் நகரில் இடம்பெற்றுள்ளது. உலக பிரசித்திபெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, மீள்பயன்பாடு அற்ற பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை போதியளவு குறைக்கவில்லை என்று குற்றம்சுமத்தியே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, தரையிலும், கடற்பரப்புகளிலும் பெரும் சுற்றாடல்மாசு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிறீன்பீஸ் சுற்றாடல் ஆர்வலர்கள், பாதாதைகளையும், பிளாஸ்ரிக்கினால் உருவாக்கப்பட்ட பூதம் ஒன்றையும், ஒரு கட்டிடத்தையே மறைக்கக் கூடிய அளவிலான பதாதைகளையும், நீரில் மிதக்கக் கூடிய வகையிலான பிளாஸ்டிக் பதாதைகளையும் பயன்படுத்தியிருந்தனர்.
படகுகள் மற்றும் தோணிகளின் உதவியுடன் அந்தப் பதாதையை கடலில் கம்பளமாக விரிந்து போராட்ட வாசகத்தை வௌியிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 7 வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 65 ஆர்வலர்கள் கலந்து கொண்டதாக கிறீன்பீஸ் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், போராட்டத்திற்கு காரணமான நெஸ்லே நிறுவனம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு 100 சதவீதம் தனது பொதியிடல் பொருட்களை மீள்பாவனைக்கும், மீள்சுழற்சிக்கும் உட்படுத்தக் கூடிய வகையில் தயார்படுத்தும் என்ற உறுதிப்படுத்தலை வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், உக்கக் கூடிய மற்றும் சேதனமாக்கக் கூடிய மூலப் பொருட்களை அதற்காக பயன்படுத்தவேண்டும் என்று கிறின்பீஸ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உறுதியளித்த வகையில் நெஸ்லே நிறுவனம் செயற்படாது என்று கூறியுள்ள சுற்றாடல் ஆர்வலர்கள். வௌிப்படையாகவும், கணிசமான முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.