பீபா உலக கிண்ண போட்டிகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்!
In உதைப்பந்தாட்டம் April 18, 2019 11:16 am GMT 0 Comments 1742 by : adminsrilanka

எதிர்வரும் 3 மாதக் காலப்பகுதியினுள் பீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பீபா சம்மேளன தலைவர் ஜியானி இன்பென்டினோ தெரிவித்துள்ளார். 2022 ம் ஆண்டு பீபா உலக கிண்ண போட்டிகளில் 48 அணிகள் கலந்துக் கொள்ளவுள்ளன.
அந்த போட்டிகள் பெரும்பாலும் கட்டார் மற்றும் அதனை அண்டிய அயல் நாடுகளில் நடைபெறும் எனவும் ஜியானி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான இறுதி முடிவு தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் பீபாவின் தலைவர் ஜியானி இன்பென்டினோ தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஆசிய கிண்ண கழகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியின் தென் மண்டல குழு சுற்று பிரிவில் மொத்தம் 36 அணிகள் இடம் பெற்றுள்ளன.
அவை 9 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதில் ஐ.எஸ்.எல். போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியான சென்னையின் எப்.சி. ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.
தனது முதல் ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப்புடன் சமநிலையை பேணிய சென்னை அணி நேற்று நேபாளத்தின் மனங் மார்ஷ்யாங்டி கிளப்பை ஆமதாபாத்தில் சந்தித்தது.
63 சதவீதம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சென்னை அணி 2–0 என்ற கோல் கணக்கில் மார்ஷ்யாங்டியை வீழ்த்தி குரூப் பிரிவில் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.
கிறிஸ் ஹெர்ட் 51–வது நிமிடத்திலும் அணித்தலைவர் மெயில்சன் ஆல்வ்ஸ் 53–வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் போட்டனர். சென்னையின் எப்.சி. அணி அடுத்து பங்களாதேஷின் அபாஹானி டாக்காவுடன் எதிர்வரும் 30–ம் திகதி இடம்பெறவுள்ள போட்டியில் சந்திக்கவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.