புதிய அரசியலமைப்பு – மலையக புத்திஜீவிகளின் முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்!
In இலங்கை November 17, 2020 4:30 am GMT 0 Comments 1302 by : Vithushagan
புதிய அரசியலமைப்பு தொடர்பாக மலையக புத்திஜீவிகளின் முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் அட்டன் சமூக நல நிறுவனத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், சமூக சேவகர்கள், சட்டதரணிகள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட புத்திஜீவிகள் கலந்து கொண்டார்கள்.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த பேராதனை பல்கலைகழக பேராசியர் எஸ்.விஜயசந்திரன்
”அமைப்புகள் தனியாகவும், கூட்டாகவும் அறிக்கைகள் சமர்ப்பிப்பது எனவும், அறிக்கைகளிலே பொதுவாக மலையக மக்களுக்கான அரசியல் அலகுகளை உருவாக்குவது, மொழி தொடர்பான பிரச்சினைகள், மலையக மக்கள் வாழ்கின்ற குடியிருப்புகளை பொது நிர்வாக கட்டமைப்புக்கு கீழ் கொண்டு வருவது, காணி பிரச்சினைகளில் அக்கறை செலுத்தி அதற்கு ஏற்ற பிரேரணைகளை வடிவமைத்து தனியாகவும், கூட்டாகவும் அமைப்புகள் ஊடாக நிபுணத்துவ குழுவிடம் முன்மொழிவுகளை கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கான திட்ட வரைபுகள் முன்னெடுக்கபட்டு வருகின்றது” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.