புதிய உறுப்பினர்களுடனான தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகள் இன்று ஆரம்பம்
In இலங்கை December 10, 2020 2:36 am GMT 0 Comments 1304 by : Dhackshala
புதிய உறுப்பினர்களுடனான தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளன.
இதன்படி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இன்று தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா நியமிக்கப்பட்டுள்ளார்.
M.M.மொஹமட், S.B.திவாரத்ன, K.P.பத்திரண மற்றும் ஜீவன் தியாகராஜா உள்ளிட்டோர் ஆணைக்குழுவின் ஏனைய .உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
20 ஆவது அரசியலமைப்பின் 41 A மற்றும் 103 முதலாம் சரத்தின் அடிப்படையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.