புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னதாக வருகிற 25-ஆம் திகதி வரை தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் எனச் சொல்லப்பட்ட நிலையில், வங்கக்கடலில் வருகிற 23-ஆம் திகதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும் தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகும் இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறும் எனவும் இது வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.