புதிய சாளம்பைக்குளம் பகுதி முழுமையாக முடக்கப்பட்டது
கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா புதிய சாளம்பைக்குளம் பகுதி பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கொழும்பில் இருந்து வவுனியா திரும்பிய தாயும், மகளும் சாளம்பைக் குளத்தில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களிற்கான பிசிஆர் பரிசோதனைகள் யாழில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவுகளின் படி இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரது இருப்பிடமான வவுனியா புதிய சாளம்பைக்குளம் பகுதி முடக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.