புதிய மெனிங் சந்தை பேலியகொடையில் இன்று திறப்பு!
In இலங்கை November 20, 2020 7:46 am GMT 0 Comments 1958 by : Dhackshala

பேலியகொடையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மெனிங் சந்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்படவுள்ளது.
புதிய மெனிங் சந்தையில் ஆயிரத்து 192 வர்த்தக நிலையங்களும் ஒரு வாகன தரிப்பிடமும் ஊழியர்களுக்கான ஓய்வறைகள், மருத்துவ வசதிகள், வங்கிகள், உணவகங்கள், குளிர் அறைகள் மற்றும் ஹோட்டல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வாகன தரப்பிடமானது சுமார் 600 வாகனங்களை நிறுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு மாடி கொண்ட மெனிங் சந்தையின் மூன்றாவது மாடிவரை வாகனங்களைக் கொண்டு செல்லுக்கூடிய வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் வரையறுக்கப்பட்டிருந்த மெனிங் சந்தையானது தற்போது பேலியகொடையில் 13.5 ஏக்கர் விசாலமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிர்மாணத்திற்கான மொத்த செலவு 6.9 பில்லியன் ரூபாய் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.